×

தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு

சென்னை: தங்கம் விலை நேற்று முன்தினம் குறைந்த நிலையில், நேற்று மீண்டும் சவரனுக்கு ரூ.112 உயர்ந்தது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நாட்களில் தொடர்ந்து அதிகரிப்பது என்பதும் இருந்து வருகிறது. அதாவது, கடந்த 11ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.43,856க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.544 அதிகரித்தது. 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு ரூ.14 குறைந்து ஒரு கிராம் ரூ.5,536க்கும், சவரனுக்கு ரூ.112 குறைந்து ஒரு சவரன் ரூ.44,288க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5550க்கும், சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,400க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது நகை வாங்குவோரை மீண்டும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

The post தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Savaran ,Dinakaran ,
× RELATED தங்கம் மீண்டும் ₹54 ஆயிரத்தை கடந்தது ஒரே நாளில் சவரன் ₹560 எகிறியது